Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்

இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்

-

இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்

சென்னை எழும்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத விடிய அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடியல் விடியல் எனக் கூறிவிட்டு காலையிலேயே சாராயம் கொடுக்கலாம் என்கிறது திமுக அரசு. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கட்டப்பஞ்சாயத்தில் சிறந்த மாநிலம் தமிழகம். இனி தமிழக அமைச்சரவை கூட்டத்தை புழல் சிறையில் தான் நடத்த வேண்டி இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை விடியா திமுக அரசு நிறைவேற்றவில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு தமிழகம் அமளிக்காடாக மாறிவருகிறது. சிந்து சமவெளி காலத்தில் பாரதம் என்கிற பெயர்தான் இருந்தது இந்தியா அல்ல. சென்னை மாநகரம், கொலை நகரத்தின் தலைநகரமாக மாறியுள்ளது.

மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதிலேயே திமுக கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் வீதியில் வந்து போராடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை எல்லாம் தோண்டி எடுக்கிறது. விடியல்- விடியல்- விடியல் என்று சொல்லி விடிந்ததுமே சாராயம் விற்கிறார்கள். நம் தலைவர்களோடு அமைச்சர் முத்துசாமி இருக்கும்போது நன்றாக இருந்தார். அங்கே சென்றதும் உளர ஆரம்பித்துவிட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ