- Advertisement -
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்
திருவல்லிக்கேணியில் உள்ள மட்டாங்குப்பம் சமுதாய நல கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும். ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட எதையும் செய்து தரவில்லை. சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிச்சயமாக பேசுவோம். கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற நிலையில் மு.க.ஸ்டாலின், இடி அமினை மிஞ்சி செயல்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் விடியா திமுக அரசுக்கு அனைவரும் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.