Homeசெய்திகள்தமிழ்நாடுஇறுதிக்கட்டத்தை எட்டும் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை!

இறுதிக்கட்டத்தை எட்டும் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை!

-

 

இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம் அல்லது ஆரணி தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ம.க. போட்டியிட அ.தி.மு.க. அறிவுறுத்தியுள்ளதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்க அ.தி.மு.க. தயங்குவதால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் ஏழு மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவைப் பதவியையும் கேட்டு பா.ம.க. நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ