Homeசெய்திகள்தமிழ்நாடு"வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!

“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!

-

- Advertisement -

 

"வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!
பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!

அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மையை வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக மாற்றத் திட்டங்களை கொண்டு வந்தவர் முதலமைச்சர். வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். விவசாயிகளின் நலனை பேரணிக் காத்திட பல அரிய திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.

“எங்கே போகிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்?”- மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளதால் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மையை அடுத்த தலைமுறையான இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ