Homeசெய்திகள்தமிழ்நாடுமனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!

-

- Advertisement -

 

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!

சென்னை கொடுங்கையூரில் மனிதநேயர் மக்கள் கட்சியின் நிர்வாகியைத் தாக்கிய புகாரில் தி.மு.க. நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

‘தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!’

கொடுங்கையூர் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அஸ்லாம். மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த இவரது வீட்டிற்கு நேற்று (பிப்.19) பிற்பகல் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் சென்றுள்ளனர். படிவத்தைக் கொடுத்து சில சான்றுகளையும் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சான்றிதழ்களைத் தர அஸ்லாம் மறுத்திருக்கிறார்.

பின்னர் அந்த பெண்கள் தி.மு.க. வட்டச் செயலாளர் ஹரிதாஸிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக, ஹரிதாஸுக்கும், அஸ்லாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஹரிதாஸ் தாக்கியதில் அஸ்லாம் காயமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!

இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க மனிதநேய மக்கள் கட்சியினர் சென்ற நிலையில், அங்கு தி.மு.க.வினரும் திரண்டிருந்தனர். அப்போது, காவல் நிலையத்திற்கு வெளியே இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அஸ்லாமைத் தாக்கியதாக புகாரின் அடிப்படையில் தி.மு.க. நிர்வாகி ஹரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்தனர்.

MUST READ