spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிறப்பு விழைாவை முன்னிட்டு கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு

திறப்பு விழைாவை முன்னிட்டு கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஆய்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை கண்ணாடி பாலத்தினை திறந்து வைக்க உள்ள நிலையில் பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.திறப்பு விழாவை முன்னிட்டு, கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 25வது வெள்ளி விழா வரும் 1 ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் வகையில் இன்று (30/12/2024) மற்றும் 31ஆம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையையும்  இணைக்கும் கண்ணாடி பால கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இதற்கான பணிகளை ஆரம்பம் முதலே அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இறுதிக்கட்டப் பணியில் முழு வீச்சில் கவனித்து வருகிறார். இதற்காகக் கன்னியாகுமரியில் தங்கி இறுதிக் கட்டப் பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்து வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கண்ணாடி பாலத்தினை திறந்து வைக்க உள்ளார்.

திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

MUST READ