spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

-

- Advertisement -

 

எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

we-r-hiring

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கின.

கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தோப்பூரில் அதற்கான இடம் தேர்வுச் செய்யப்பட்டு, கடந்த 2019- ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன் பின்னர் கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது.

இந்த சூழலில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை தொடங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’

அதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.

MUST READ