spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

-

- Advertisement -

 

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

we-r-hiring

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (மார்ச் 03) காலை 07.00 மணி தொடங்கியது.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது.

சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும் என்றும், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும், போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ