spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

CM Stalin
Photo: TN GOVT

அனைத்து குடும்ப அட்டைகாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள், சர்க்கரை குடும்ப அட்டைத்தாரர்கள், பொருளில்லா குடும்ப அட்டைத்தாரர்கள் என அனைத்து வகை குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1,000 ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!

முன்னதாக, அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மட்டும் ரூபாய் 1,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ