Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2 தேர்வில் சிறையிலிருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சிறையிலிருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

-

பிளஸ் 2 தேர்வில் சிறையிலிருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

கோவை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சியடைந்தனர்.

Tamil News | செல்கிறது கோவை மத்திய சிறை காந்திபுரம் டூ வெள்ளலூர் :  அதிகாரிகள் தீவிர ஆலோசனை | Dinamalar

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 34,327 மாணவர்களில், 33,493 பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் கோவை மத்திய சிறையில் உள்ள 12 சிறை கைதிகள் சிறையில் இருந்தவாறு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர், அதில் 12 மாணவர்களும் தேர்ச்சியடைந்தனர். இதில் கார்த்திகேயன் என்பவர் 600 க்கு, 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல் பிளஸ் டூ பொதுத் தேர்வில் வேலூர் சிறைகளிலிருந்து தேர்வு எழுதிய மூன்று கைதிகள் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆண் கைதிகள் இரண்டு பேர், மற்றும் பெண் கைதி ஒருவர் பிளஸ் டூ பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத் தேர்விற்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று பேர் தேர்வு எழுதவில்லை.

MUST READ