spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்திய பின்னணி பாடகி பி.சுசீலா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்திய பின்னணி பாடகி பி.சுசீலா!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்திய பின்னணி பாடகி பி.சுசீலா!தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு   தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கி நேரில் அழைத்து கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

70 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், பாடகி பி.சுசீலா 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

we-r-hiring

அதே போல், கவிஞர் முகமது மேத்தா, மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பல்வேறு நூல்கள் எழுதி, 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.

கலைத்துறையில் உள்ள சுசிலா மற்றும் மு.மேத்தாவின் சேவையை பாராட்டி, தமிழக அரசு கடந்த வாரம் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில், பி. சுசிலா மற்றும்  மு.மேத்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த விருதினை வழங்கி கவுரவித்தார்.விருதுடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் மற்றும் மறக்க முடியுமா ? படத்தில் இருந்து ‘காகித ஓடம் கடலலை மீது’  ஆகிய பாடல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாடி அசத்தினார் பின்னணி பாடகி பி.சுசீலா.

https://x.com/sunnewstamil/status/1842108622693642709

MUST READ