நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகர் தனுஷ் குபேரா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து பல படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் தனுஷின் 52 ஆவது படமான இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதைக் கடந்த தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -