Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக தோல்விக்கு பழனிசாமிதான் காரணம்- டிடிவி தினகரன்

அதிமுக தோல்விக்கு பழனிசாமிதான் காரணம்- டிடிவி தினகரன்

-

- Advertisement -

அதிமுக தோல்விக்கு பழனிசாமிதான் காரணம்- டிடிவி தினகரன்

மதுரையில் நடைபெற்ற இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முருகனின் மகள் திருமண விழாவில் மக்கள்செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ttv dhinakaran

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். வரும் காலத்தில் அனைவரும் ஒரே அணியில் திரண்டு, திமுகவை வீழ்த்த வேண்டும். இரட்டை இலை சின்னம் இல்லையென்றால், அதிமுகவின் நிலை மோசமாகி இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது வாங்கப்பட்ட வெற்றி

இரட்டை இலை இருந்தே அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி. தங்கள் கோட்டை என்று சொல்லிக் கொண்டு கோட்டை விட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது வழங்கப்பட்ட வெற்றி அல்ல, வாங்கப்பட்ட வெற்றி. இரட்டை இலை சின்னம் இல்லையெனில் அதிமுகவின் நிலை மோசமாகியிருக்கும். அதிமுகவின் தோல்விக்கு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியே காரணம். பழனிசாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை கட்சி மிகவும் பலவீனம் அடையும்” எனக் கூறினார்.

MUST READ