Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறு இல்லை: டிடிவி தினகரன்

ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறு இல்லை: டிடிவி தினகரன்

-

- Advertisement -

சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதில் தவறு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், ஒருங்கிணைந்த தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “நேற்றைய தினம் சட்டப்பேரவையில் நடந்தது ஒரு கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று ஆளுநர் நினைக்கிறார். அது வருத்தம் அளிக்கிற செயல்படாக பார்க்கிறோம். மேலும் ஆளுநர் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார். அவர் செயல்பாடு மத்திய அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆளுநரை திரும்ப பெற்றால் தான் மத்திய அரசுக்கு நல்ல பெயர் இருக்கும்.

rn ravi

கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று இதுபோன்று அதிமுக ஆளுநர் விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர். ஆளுநர் ஒருப்பக்கம் அரசுக்கு எதிராக இருக்கிறார் என்று சொல்ல முடியும். பல பிரச்சினை தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால் நேற்று ஆளுநர் செய்தது, இதெல்லாம் மறைத்து விட்டது. திமுக வளர்வதற்கு ஆளுநர் உதவி செய்து வருகிறது.

முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது தவறில்லை என்று நினைக்கிறேன். அரசியல் தலைவராக அவர் செய்தது தவறு இல்லை. பாஜக ஆளுநருக்கு நேரடியாக ஆதரவு தருவது தவறு. தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேமுதிகவிற்கும் அமமுகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தற்போது வரை தேமுதிக சுதீஷ் உடன் பேசி கொண்டு தான் இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் திமுவிற்கு மிக பெரிய பின்னடைவு இருக்கும்” என தெரிவித்தார்.

MUST READ