Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்விழா காணும் அண்ணா மேம்பாலம் 2023 மார்ச் மாதத்திற்குள் புனரமைப்பு - எ.வ.வேலு

பொன்விழா காணும் அண்ணா மேம்பாலம் 2023 மார்ச் மாதத்திற்குள் புனரமைப்பு – எ.வ.வேலு

-

பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பால புனரமைப்பு பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்விழா காணும் அண்ணா மேம்பாலம் 2023 மார்ச் மாதத்திற்குள் புனரமைப்பு - எ.வ.வேலு
E. V. Velu

இதையொட்டி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அண்ணா மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்தார். 1971-ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் 1973-ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.

குதிரை பந்தயத்தை ரத்து செய்ததன் நினைவாக குதிரை வீரன் சிலையை, 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் கீழே, கலைஞர் 1974-ஆம் ஆண்டில் நிறுவினார். இந்த மேம்பாலத்தை 8.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க கடந்தாண்டு திட்டமிடப்பட்டதன் அடிப்படையில், இதன் தூண்களும் தற்போது மறு வடிவமைப்பு செய்யப்படவுள்ளன.

மேம்பாலத்தின் கீழே, பொலிவூட்டும் பசுமையான செடி வகைகளை அமைக்கவும் பொதுமக்கள் நடந்த செல்ல ஏதுவாக நடைபாதைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டு புனரமைக்கப்படும் அண்ணா மேம்பாலப் பணிகள், வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக இதனை ஆய்வு செய்துள்ள அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

MUST READ