Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா நகரில் களைகட்டிய ”ஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி”

அண்ணா நகரில் களைகட்டிய ”ஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி”

-

சென்னை அண்ணா நகர் 2 வது நிழற்சாலையில் 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

சென்னை, அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர் சார்பில் நடத்தப்படும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்,. இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் உற்சாக நடனம், பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். பொதுமக்கள் குழந்தை போல் மாறி எந்த இடையூறும் இன்றி நடனமாடி மகிழ்வார்கள். இந்த நிகழ்ச்சி இன்று அண்ணா நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக அண்ணாநகர் 2 வது நிழற்சாலை புளு ஸ்டார் சந்திப்பு முதல் 3வது நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக மொத்தம் 3 மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

MUST READ