spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம்"- அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு!

“கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம்”- அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம்"- அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு!

we-r-hiring

வருகிற பிப்ரவரி 07- ஆம் தேதி நடைபெறும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என அண்ணா தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை கோபாலபுரத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்குவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், “வரும் பிப்ரவரி 07- ஆம் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அன்று மாலையே ஆலோசனையில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?

மேலும், தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். தமிழக அரசு தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. 18 மாத நிலுவைத்தொகையில் ரூபாய் 2,000 கூட அரசு கொடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

MUST READ