
தி.மு.க.வின் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு இலாகா இல்லாத அமைச்சர் பதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நடைபயணம் மேற்கொண்டால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு ஆவடி காவல் ஆணையரகத்தால் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.
நடைபயணம் ரத்து செய்யப்பட்டதால் நேரடியாக ஆவடி மாநகர அலுவலகம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திட்டமிட்டப்படி கலந்து கொண்டு மக்களிடையே பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும், தங்கள் ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து பல்வேறு தகவல்களை பொதுமக்களிடம் தெரிவித்தார்.
கூந்தலில் எண்ணெய் பசை நீங்க இதை பண்ணுங்க!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் வெளிநாடு பயணமாக ஸ்பெயின் சென்று வந்தீர்கள்; விமான நிலையத்தில் சம்பந்தமில்லாமல் இலாகா இல்லாத அமைச்சர் அண்ணன் பொன்முடியை அருகில் வைத்திருந்தீர்கள், அதேபோல் ஜெயிலில் இருக்கக் கூடிய இலாகா இல்லாத அமைச்சர் அண்ணன் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் 1 லட்சத்தி 5 ஆயிரம் சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போ எங்க அண்ணா நாசர் மட்டும் என்ன குறைவா? அவருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் பதவி வழங்கிட வேண்டும். ஆகவே இந்த பாதயாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களுடைய வேண்டுகோள் எனவும், அவர்களுக்கு இருக்கும் அதே திறமையும், தகுதியும், அண்ணன் நாசருக்கும் இருக்கிறது.
உடல் எடை அதிகரிக்க நேந்திரம் காய் கஞ்சி!
கல் எடுத்து எறிகிறார் பால் விலை உயர்ந்தால் மத்திய அரசின் மீது பழி போடுகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் தனது துறையைத் தாண்டி கமிஷன் வாங்குவதில் வல்லவராக இருக்கிறார். ஆகவே உடனடியாக சா.மு.நாசரையும் இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயம் என்பதை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது என தெரிவித்தார்.