
தமிழக காவல்துறையில் புதிதாக தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு அனுமதி வழங்கி, உள்துறைச் செயலாளர் அமுதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி
தீவிரவாத நடவடிக்கைகளைத் திறமையாக எதிர்கொள்வதற்காக நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புப் படை உளவுத்துறையின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல், தமிழ்நாடு காவல்படையின் தலைவர் ஆகியோரின் உத்தரவின் படி, தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் சுதந்திரமான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும், தீவிரமாக எதிர்ப்புப் படைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் அலவைக்குந்தபுரமுலோ கூட்டணி… கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்…
383 பணியாளர்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவில், அதிகாரிகளுக்கான பொறுப்புகளை உருவாக்குவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 28 கோடி நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.