Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி

-

- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

Accident
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-ஷிர்டி நெடுஞ்சாலையில் ஷீரடிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து மிது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. நாசிக்- ஷீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். காயமடைந்த பயணிகளை உடனடியாக ஷீரடி மற்றும் நாசிக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

தற்போது விபத்தில் காயமடைந்தவர்கள் நாசிக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள் என தெரிகிறது. அவர்களில் 7 பேர் பெண்கள், 3 பேர் ஆண்களாவர். பெரும்பாலான பயணிகள் தானேவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

MUST READ