spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்"- அண்ணாமலை வாழ்த்து!

“இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்”- அண்ணாமலை வாழ்த்து!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 ஆசிரியர்களில், தமிழகத்திலிருந்து, மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி. மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவருக்கும், தமிழகம் பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

நாட்டின் எதிர்காலமான மாணவர்களை, தலைசிறந்தவர்களாக உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ