spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்"- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

OPS

we-r-hiring

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தமிழக அரசை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மகளுடன் சேர்ந்து மோடியை சந்தித்த நடிகர் அர்ஜூன்

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22- ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

MUST READ