மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அறிவியலுக்கு திடீரென மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்புகருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலை பகுதியிலும் இன்று அதிகாலை இந்த பலத்த மழை காரணமாக அறிவுகளுக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக பாதுகாப்புகருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட திடீர் தடையால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தற்போது அருவிகளில் தண்ணீர் சீற்றம் அதிகமாக உள்ளது. எனினும் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. தண்ணீரின் சீற்றும் குறைந்ததும் வழக்கம் போல் அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
