Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

தனியார் வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

-

 

'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!
File Photo

திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சைரன் படத்தின் தெலுங்கு வெளியீட்டில் சிக்கல்… படக்குழு பாதிப்பு…

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன், கண்ட்டோன்ட்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். மேலும், அதே வங்கியின் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு இவரது நடப்பு கணக்கை வங்கி நிர்வாகம் திடீரென முன்னறிப்புவின்றி முடக்கியது.

இது குறித்து சம்மந்தப்பட்ட வங்கிக் கிளையில் விசாரித்த போது, கிரெடிட் கார்டில் பெறப்பட்ட கடன் தொகையை செலுத்தாததால் வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதாக வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, கடன் தொகையைத் திருப்பி செலுத்திய ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்தும், வங்கிக் கணக்கை விடுவிக்க வங்கி நிர்வாகம் காலதாமதம் செய்துள்ளது.

கண்ணமே என் கண்ணால… டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்…

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சரியான ஆவணம் செலுத்தியும் வங்கிக் கணக்கை முடக்கியதற்கு வங்கிக்கு ரூபாய் 20,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த தொகையை ஜெகநாதனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மேலும், வழக்கு செலவுக்காக ரூபாய் 5,000 செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ