
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிவித்துள்ளார்.
இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறுவோம்.
தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர்களை மத்திய பா.ஜ.க. அரசு விரும்புகிறது. பிரதமர் நாளை திருப்பூரில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். மூன்றாவது முறை பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும் என்றும் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?
கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.