
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று (ஜூலை 07) மாலை 03.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பினால் காவல்துறையினரின் பணி அழுத்தம் குறைந்து விடும். காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பணி அழுத்தம் உள்ளது. காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!
கோவை சரக டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் சிறப்பாகப் பணியாற்றியர். டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் கண்டிப்பாக காவல்துறையினருக்கு ஓய்வு தர வேண்டும். காவல்துறை உயரதிகாரிகள் யார் யாருடன் விஜயகுமார் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும். விஜயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ பணி வழங்க வேண்டும். விஜயகுமாரின் தற்கொலைத் தூண்டப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.