spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…

மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…

-

- Advertisement -

மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாதாந்திர உதவித் தொகையை ஒன்றிய அரசின் பங்காக மாற்றுத்திறனாளி ஒவ்வொருவருக்கும் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதை போன்று மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், உதவித்தொகை வழங்குவதை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றவும், 100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்

MUST READ