
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மகனின் ரூபாய் 100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
தமிழக சட்டப்பேரவையின் பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி என்பவர் சமீபத்தில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். இதில் முறைகேடாகப் பத்திரப்பதிவு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் பத்திரப்பதிவுத் துறையில் புகார் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்திருந்தார்.
துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்!
இதையடுத்து, நயினார் பாலாஜியின் ரூபாய் 100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவை ரத்து செய்து நெல்லை மண்டல பத்திரப்பதிவு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.