spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது- பாஜக

தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது- பாஜக

-

- Advertisement -

தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது- பாஜக

மத்திய அரசின் ஊழியர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

narayanan thirupathy

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “கரூரில் இரு வருமான வரிதுறை அதிகாரிகள் மற்றும் செந்தில் பாலாஜி விசுவாசிகள் இரு தரப்பினரின் மீதும் வழக்கு தொடுத்திருப்பதாக சொல்லப்படுவது வியப்பையளிக்கிறது. மேலும், முன்னரே தகவல் சொல்லாது சென்றால் இப்படி தான் நாடாகும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் திரு. டி கே எஸ் இளங்கோவன் அவர்கள் கூறியிருப்பது கேலிக்கூத்து.

we-r-hiring

சோதனைக்கு செல்லும் வருமானவரி துறை அதிகாரிகளுக்கே, வாகனங்களில் ஏறும் போது தான் எங்கு சோதனையிட போகிறார்கள் என்று தெரியும். அப்படியிருக்கையில் காவல்துறைக்கு எங்கு சோதனை நடக்கப்போகிறது என்ற தகவலை முன்னரே சொல்ல வேண்டும் என பொது அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள். மேலும், வருமான வரி துறையினர் எங்கு வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் சோதனையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்பதை சட்டம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் அதற்கான விளைவுகளுக்கு தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது வரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தன போக்கை, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது. மத்திய அரசின் ஊழியர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ