கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் வழியாக தினம் தோறும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக் கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை இலவசமாக அனுப்பாமல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ளூர் வாகனங்கள் டோல்கேட்டில் இலவசமாக செல்லலாம் என whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் போது எங்களது வாகனத்தை எப்படி நிறுத்தி கட்டணம் வசூல் செய்யலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகளிடம் டோல்கேட் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.