உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக போராட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதவி விலகக்கோரி 11-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாஜகவினர் அறிவித்துள்ளானர்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின்போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் மேடையில் கண்டனம் தெரிவிக்காத அமைச்சர் சேகர்பாபு பதவி விலக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 11 ஆம் தேதி அறநிலையத்துறை ஆணையர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.