spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்:  சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு

அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்:  சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு

-

- Advertisement -

தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் பிதிவிட்டுள்ளாா்.அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்:  சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்புமேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறிவந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன்மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்” என கூறியள்ளாா்.

பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்

we-r-hiring

MUST READ