Homeசெய்திகள்தமிழ்நாடுகாவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதம்

காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதம்

-

நாங்குநேரியில் காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதம்

நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதிக பயணிகளை ஏற்றியதால் சில பேருந்துகளுக்கும் , நிறுத்தம் அல்லாத இடங்களில் நிறுத்தியதினால் சில பேருந்துகளுக்கும் , அதிவேகத்தில் இயக்கியதனால் சில பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சீருடையில் இருந்தாலும் உரிய ஆவணங்களைக் காட்டினால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ள முடியும் என நடத்துநர், காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து ஆறுமுகப்பாண்டி என்ற காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை செயலாளர் நேற்று பரிந்துரைத்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விதிமீறல்களில் ஈடுபடும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்துக் காவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதம்

அதன்படி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பயணிகளை ஏற்றி வந்ததாகவும் , கூடுதல் வேகத்தில் பேருந்துகளை இயக்கியதாகவும் பல இடங்களில் அரசுப் பேருத்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிறுத்தம் அல்லாத இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிய மற்றும் நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது என அரசுப் பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம்,தாம்பரம் அருகே மணிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். ஓட்டுநர் , நடத்துநர்கள் சீருடையை முறையாக அணிந்துள்ளனரா என்றும் அரசுப் பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டம் அனைத்துப் பேருந்துகளுக்கும் சமமானதுதான் என்பதால் விதிமீறலில் ஈடுபடும் அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் அபராதம் விதிப்பதாகவும், நடவடிக்கைகள் குறித்து வாரந்திர அடிப்படையில் கண்காணிப்பாளர்களிடம் மாவட்ட வாரியாக தெரிவிக்க உள்ளதாகவும் போக்குவரத்துக் காவலர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில் நாங்குநேரி சம்பவத்தை மனதில் வைத்துதான் காவல்துறையினர் திடீரென அபராதம் விதிக்கின்றனர் என்று போக்குவரத்து துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே போக்குவரத்துத்துறை நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் , கூடுதல் பயணியரை ஏற்றுவது போன்ற பிரிவுகளில் அபராதம் விதிப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

MUST READ