தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ் எஸ் புறத்தைச் சேர்ந்த 10 பேர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று முன் தினம் சென்றுள்ளனர்.

சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று டிசம்பர் 23ம் தேதி கோவிலில் இருந்து ஆண்டிபட்டி திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் நல்இரவு தமிழக கேரளா இணைப்புச் மலைச்சாலையான குமுளி மலைச்சாலை வழியாக வந்து கொண்டு இருந்த போது மாதா கோயில் அருகில் உள்ள பாலத்தில் கார் மோதி தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பெரியார் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் ராட்சத இரும்பு குழாய்கள் மீது தலைகுப்பற விழுந்தது விபத்துக்கு உள்ளானது.

விபத்து பற்றி தகவல் அறிந்த காவல்துறையை தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்தில் 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர், மேலும் 3 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான கார் கிரேன் உதவியுடன் படத்திலிருந்து மீட்கப்பட்டது. விபத்து குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
