பல்லடம் அருகில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது புதுக்கோட்டையில் மருத்துவம் பயின்று வரும் காலபட்டியை சேர்ந்த ஸ்ரீவர்தினி என்பவர் குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது கார் எதிர்பாராத விதமாக பேருந்தின் பக்கவாட்டில் உரசி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு (apcnewstamil.com)
விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய ஸ்ரீவர்தினியின் குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.