spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

-

- Advertisement -

 

விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

we-r-hiring

சின்னத்திரை நடிகை மதுமிதா வேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகை மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி இரவில் தனது நண்பரின் புதிய காரை சோழிங்கநல்லூரில் உள்ள பிரத்யங்கரா கோயிலில் பூஜை செய்துவிட்டு, காரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றதால் காரை இடதுபக்கம் திருப்பும் போது, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். விபத்து தொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், நடிகை மதுமிதா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.

காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!

மேலும், காரை பறிமுதல் செய்து ஆர்டிஓ சோதனைக்கு பிறகு நடிகையிடம் ஒப்படைத்தனர். விபத்து ஏற்பட்ட போது, நடிகை மதுமிதா மதுபோதையில் இல்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ