தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது.
ஆளுநரின் செயல்பாடு அவருக்கு தமிழக ஆளுநராக செயல்பட விரும்பும் இல்லாததையே காட்டுவதாகவும், ஆளுநர் ரவி விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார் என்றும், அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் சட்மன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பது ஆண்டுக்கு ஆண்டு மோசமான முன்னுதாரணமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் தமிழ்தாய் வாழ்த்து படுவதற்கு முன்பாக அவயை விட்டு வெளியேறக்கூடாது, ஆனால் ஆளுநர் ரவி வெளியேறுகிறார். அரசு தயர் செய்து கொடுக்கும் உரையில் பல வசியங்களை படிக்க மறுக்கிறார், குறிப்பாக உரையில் உள்ள திராவிட மாடல் என்றும் சொல்லாடலையும், சட்டம் ஒலுங்கு சிறப்பாக உள்ளது என்பதையும் தவிர்கிறார்.
குறிப்பாக கடந்த 2024ல் ஆளுநர் உரை உண்மைக்கு மாறாக தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது எனவும், 2025ல் உரையை படிக்காமல் வெளியேறியுள்ளார். இவ்வாறு சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது என்பது அவமதிக்கும் வகையிலும், ஜனநாயக செயல்பாட்டுக்கு எதிரானதும் ஆகும். முன்னதாக அவர் அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் அமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார்.
ஒவ்வொரு முறையும் அரசு அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பதோடு, முடிவெடுக்கவும் காலம் தாழ்த்துகிறார். இதனால் வளரச்சி திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன மேலும், திராவிட கலாச்சரத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்தையும் தெரிவித்து வருகிறார். ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆனால் ஆர்.என்.ரவி அவ்வாறு நடந்துகொள்வதில்லை, மேலும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தை தாண்டி செயல்படக்கூடாது, ஆனால் ரவி அதனை மீறி வருகிறார். எனவே அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை உடனடியா நீக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் வழக்கறிஞர் ஜெயசுகின் கோரியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.