Homeசெய்திகள்தமிழ்நாடுவினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

-

- Advertisement -

 

வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!
Video Crop Image

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.ஏ.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், தமிழ்நாடு அரசு தரப்பில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைக் கணக்கிட்டு, நவம்பர் மாதத்தில் வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தங்களது அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததைச் சுட்டிக்காட்டியுள்ள கர்நாடக அரசு அதிகாரிகள், தண்ணீர் திறக்க உத்தரவிடக் கூடாது என்று வலியுறுத்தனர்.

இந்தியன் 2 திரைப்பட அறிமுக வீடியோ வெளியானது

கர்நாடக அணிகளில் நீர்இருப்பு மற்றும் நீர்வரத்து மற்றும் மழையளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, நவம்பர் 01- ஆம் தேதியில் இருந்து நவம்பர் 23- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க, கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ