Homeசெய்திகள்தமிழ்நாடு"எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது"- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

-

 

"எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது"- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
Video Crop Image

எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை. காவிரியில் இருந்து வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் கேட்டோம், ஆனால் 2,600 கனஅடி தண்ணீரை வழங்கப் பரிந்துரைத்துள்ளனர்.

ஜூன் முதல் இதுவரை வழங்க வேண்டிய 140 டி.எம்.சி. தண்ணீரில் 56 டி.எம்.சி.யே கொடுத்துள்ளனர். எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட செயல்படுத்த மறுக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் மெத்தனமாக செயல்படுகிறது. இதுவரை இருந்த கர்நாடகா முதலமைச்சர்களில் இவ்வளவு பிடிவாதமானவரைப் பார்த்ததில்லை.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை

கர்நாடகா அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ