கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஓர் இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.
பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் கோட்டையும் ஆலப்புழா பத்தனம்திட்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. திருவனந்தபுரம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தொடர் மழை காரணமாக கேரளாவில் வடக்கு மாவட்டங்களில் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது.
இன்றும் அதிக கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் வடக்கு கேரளா பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.