spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

-

- Advertisement -

சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு ரயில்கள் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.

we-r-hiring

ரயில் எண். 20692 வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் நாகர்கோயில் அந்தோதியா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது .இதனால் 23 நாட்களுக்கு ரயில் சேவை கிடையாது.

ரயில் எண்.20684, திங்கள், புதன், வெள்ளிக்கிழமை இயங்கும் செங்கோட்டை தாம்பரம் ரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 14 வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்.

சென்னை செல்லாது , விழுப்புரம் தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

ரயில் எண். 20683 ஞாயிறு,செவ்வாய், வியாழன் கிழமைகளில் இயங்கும் ; தாம்பரம் செங்கோட்டை ரயில் வழக்கமான நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.

ரயில் எண். 22675,22676 ஆகஸ்ட் 15, 16 ,17 ஆகிய தேதிகளில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும்.

ரயில் எண்.20606 ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் சென்னை ரயில் விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்.

ரயில் எண்.20606 ஆகஸ்ட் 17 அன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் வழியாக எழும்பூர் செல்லும்.

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

8.7.24 முதல் 18.8. 24 வரை ரயில் எண்.09420 திருச்சியில் இருந்து அகமதாபாத் செல்லும். ரயில் எண் 09419 விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக அகமதாபாத் செல்லாமல் திருவண்ணாமலை, காட்பாடி, திருத்தணி ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும்.

பொதிகை எக்ஸ்பிரஸ்:ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு வரையே செல்லும்.

தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

MUST READ