Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்

-

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்

செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்திடீரென முதியவர்களை சந்தித்தார்.

MKStalin

1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்தார். அப்போது மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, லுங்கி, போர்வைகளை மற்றும் நல திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கினார்.

சென்னையில் இருந்து ராலை மார்கமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கள ஆய்வுக்கு செல்லும் போது தீடீரென செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கலைஞர் கருணாநிதிக்கு பிறகு இந்த பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் எந்த முதல்வரும் நேரில் வரவில்லை, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும், மேலும் முதல்வரிடம் பல கோரிக்கை முன் வைத்தோம் அந்த கோரிக்கை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததாகவும் மறுவாழ்வு மையத்தில் இருப்போர் தெரிவித்துள்ளனர்.

 

MUST READ