Homeசெய்திகள்தமிழ்நாடுவிமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை... பா.ஜ.க.வினர் சாலை மறியல்!

விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை… பா.ஜ.க.வினர் சாலை மறியல்!

-

 

விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை... பா.ஜ.க.வினர் சாலை மறியல்!
Video Crop Image

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு (ஜூன் 10) சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க.வின் மாநில தலைவர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்த போது, அந்த பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. எனினும், காரில் இருந்து இறங்கி, கட்சியின் தொண்டர்களை அமித்ஷா சந்தித்தார். பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டதும், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜிஎஸ்டி சாலையின் இரண்டு புறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அமித்ஷா வருகையின் போது, வேண்டுமென்றே மின்சாரம் தடைச் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாகவும் கூறி, பா.ஜ.க. தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். சுமார் 20 நிமிடங்கள் வரை சாலை மறியல் நடைபெற்றதால், ஜிஎஸ்டி சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றனர்.

வெற்றிமாறனுக்கு முன் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணையும் சூர்யா!

அப்போது, பா.ஜ.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிகழ்ந்தது.

MUST READ