spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என அறிவிப்பு!

“சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிப்பு!

-

- Advertisement -

 

"சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என அறிவிப்பு!

we-r-hiring

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூர்- கோட்டயம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அனுமதியின்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம்!

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் டிசம்பர் 18- ஆம் தேதி ஜனவரி 01, 29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டயத்திற்கும், டிசம்பர் 19- ஆம் தேதி, ஜனவரி 02, 30 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 01.10 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், இரவு 07.00 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு!

இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பக்தர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ