Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!

-

 

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!
Video Crop Image

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.05) பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!

மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகள், ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், விமான நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் கரை புரண்டோடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் சூழந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள், உடைகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை… தேங்கிய மழைநீர்….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்…ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு வழி!

தொடர் கனமழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.05) பொதுவிடுமுறையாக் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ