சென்னை மாநகராட்சி மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் -11 ல் 147 ஆவது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் பகுதியில் திமுகவின் மறைந்த அன்பழகன் அவரின் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் மற்றும் எம்எல்ஏ கணபதி,மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்போது பெய்த பருவ மழைக்கால வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுக்க ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் செலவு செய்து வடகிழக்கு பருவமழை வந்த சுவடே தெரியாமல் செய்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர். பொங்கலுக்கு பரிசு பொருட்கள் தர மாட்டார்கள் என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் 1000 ரூபாய் அறிவித்து மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். சீனா, ஜப்பான் ,பிரேசில், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா கூடிக் கொண்டிருக்கும் சூழலில். ஒன்றிய அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்காத நிலையில் தமிழக அரசு ஒரு கூட்டத்தை கூட்டி பல வகையான ஆலோசனை மேற்கொண்டு கொரோனா பாதிக்கப்பட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெளி நாட்டில் இருந்து வருபவர்களை உடல் வெப்பத்தை கண்காணிக்கும் கருவி இயங்கிக் கொண்டு வருகிறது. ஆர்டிபிசிஆர் மருத்துவ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 3 நபர்களுக்கு மேல் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அந்த பகுதி முழுவதும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். தற்போது தினமும் சராசரி 4000 பேருக்கு ஆர் டி பி சி ஆர் செய்யப்பட்டு வருகிறது .அதில் சிங்கிள் டிஜிட்டல் பாதிப்பு அளவில் தான் உள்ளது. பெரிய அளவில் பதட்டப்பட தேவை இல்லை என்றாலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்” என கூறினார்.
