

சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் திரும்பியதால் உளுந்தூர்பேட்டை மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!
சென்னையில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கு தங்களது வாக்குகளை செலுத்தவும், வார விடுமுறைக்காகவும் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றிருந்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் நேற்றிரவு சென்னைக்கு திரும்பினர். சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றனர். சுங்கச்சாவடி தரப்பில் போக்குவரத்தைச் சரி செய்ய எதிர் திசையில் உள்ள ஒரு வழித்தடத்தில் சென்னைக்கு செல்லும் பேருந்துகளை செல்ல அறிவுறுத்தினர்.
‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…… ரஜினியின் கையில் இதை கவனித்தீர்களா?
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
