Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

-

 

சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையேயான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 12) காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பிரதமர் காணொளியில் தொடங்கி வைத்த நிலையில், சென்னை சென்ட்ரலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

ஏப்ரல் 4- ஆம் தேதி வரை சென்னை- பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை வரும் ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் மைசூருக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்- மும்பை, பாட்னா- லக்னோ, ராஞ்சி- வாரணாசி உள்ளிட்ட 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பிறை தெரிந்தது….தொடங்கியது ரமலான் நோன்பு!

அதேபோல், ‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிறுதானியப் பொருட்கள், உள்ளூர் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்த வாய்ப்புள்ளது.

MUST READ