spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைய சமுதாயத்திற்காகவே உழைப்பவர்கள் முதல்வர், துணை முதல்வர் – அன்பில் மகேஷ் புகழாரம்

இளைய சமுதாயத்திற்காகவே உழைப்பவர்கள் முதல்வர், துணை முதல்வர் – அன்பில் மகேஷ் புகழாரம்

-

- Advertisement -

அமைச்சர் அன்பில் மகேஷ் மேடை பேச்சு

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் விளக்கம் என்பது எந்த ஒரு காரியத்தையும் செய்வதாக இருந்தாலும் அதனை ஆராய்ந்து அதை யார் செய்ய முடியும் என்பதனை ஆராய்ந்து அவரிடம் வழங்க வேண்டும் என்பதே அது பொருளாகும்.இளைய சமுதாயத்திற்காகவே உழைப்பவர்கள் முதல்வர், துணை முதல்வர் – அன்பில் மகேஷ் புகழாரம்இந்த இடத்தில் நாங்கள் பொறியாளர் என்பதனை கூறுவதை விட தமிழ் பொறியாளர்கள் என்று மிகவும் பெருமையுடன் கூறி இங்கு அமர்ந்துள்ளோம். பண்பாட்டையும் நாகரிகத்தையும் அடுத்த காலகட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய பெருமை நமது பொறியாளர்களுக்கு உள்ளது.

we-r-hiring

பொறியாளர்கள் என்றவுடன் எனக்கு திருச்சியில் உள்ள கல்லணை மிக அதிக அளவில் நினைவுக்கு வரும். 1800 ஆம் ஆண்டு  காலகட்டத்தில் கரிகாலன் கட்டிய அணை ஒரு காரணமாக தான் அங்கு உள்ளது எனக் கூறி அதற்கு மேலே தான் அணையை மேம்படுத்தி கட்டினார்கள் அது ஒரு மிகப்பெரிய பொறியாளர் யுக்தி என நான் பார்க்கிறேன்.  தொடர்ந்து இளைய சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் இரண்டு பேர் ஒன்று முதல்வர். மற்றொன்று துணை முதல்வர் ஆவார்கள். ஓசூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைப் போல் 24 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வந்துள்ளது எனக் கூறியவர் தான் நமது முதல்வர். அதற்கான இளைய சமுதாயத்தினை அமைத்துக் கொடுப்பதுதான் நமது துணை முதலமைச்சர்.

இன்றைய காலகட்டத்தில் கூட்டமைப்பான ஒரு வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்றால் அது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதின் காரணமாக தான். 1973 ஆம் ஆண்டு பொறியாளரின் நுட்பம் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் அன்றைய காலகட்டத்தில் புத்தகத்தை வெளியிட்டார். இன்றைய நிகழ்ச்சி சிறப்பிக்க முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரப்பிள்ளை வருகை புரிந்துள்ளார் குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞரே வருகை புரிந்ததற்கு சமம் என நான் எண்ணுகிறேன் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளாா்.

15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் – அன்புமணி

MUST READ