spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇணையதளம் பார்க்க சிறுவர்களுக்கு தடை – ஐகோர்ட்

இணையதளம் பார்க்க சிறுவர்களுக்கு தடை – ஐகோர்ட்

-

- Advertisement -

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியா்கள் இணையதளத்தை பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.இணையதளம் பார்க்க சிறுவர்களுக்கு தடை – ஐகோர்ட்உலக அளவில் சமூக வலைதளப் பயன்பாடுகளின் சேவை அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சிறுவர்களும் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி கற்கும் திறன், உளவியல் நலனும் சீர்குலைகின்றன. இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களால் சிறுவர் – சிறுமியர் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர் என்று பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில்தான், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவா் மற்றும் சிறுமியா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பானீஸ்  தடை விதித்தாா்.

we-r-hiring

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியா்கள் இணையதளத்தை பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை விதிக்கும் வரை சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்… அன்புமணி தரப்பு பாமக தலைமை நிலையம் அறிவிப்பு!

MUST READ